×

2014ல் மோடி கொடுத்த கேரண்டி என்னாச்சு: சொன்னாரே..! செஞ்சாரா..? முத்தரசன் கேள்வி

தேர்தல் பிரசாரம் குறித்து இந்தியா கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை செய்வதற்காக இ.கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. கேரண்டி மோடி என்ற பெயரில் மோடியே அதனை வெளியிட்டுள்ளார். 2014ல் கொடுத்த கேரண்டி என்ன ஆச்சு? என்கிற கேள்விக்கு இதுவரைக்கும் பதில் இல்லை.

கோவையில் பிரசாரத்துக்கு வந்த மோடி, ஜவுளி தொழில் பிரகாசமாக உள்ளதாக உண்மைக்கும், நேர்மைக்கும் மாறாக பேசி சென்றுள்ளார். வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற இயல்பான குணம் நம் நாட்டு மக்களிடம் இருக்கிறது. அம்பேத்கார் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு மனுதர்ம சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஜனநாயகம் என்பது இந்த ஆட்சியில் கேள்விக் குறியாகிவிட்டது.

மோடி ராமரை மிகவும் நம்பி இருக்கிறார். தேச பிதா காந்தி ராமராஜ்யம் வேண்டும் என்று சொன்னார். ராமராஜ்யம் என்று சொன்னால் நல்ல நீதியை தருவது தான். ஆனால் ராமர் பேரைச் சொல்லி நீதி இல்லாத ஆட்சி இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘நாடு விடுதலை பெற்றதற்கு முக்கிய காரணம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. நாட்டின் விடுதலைக்காக போராடிய கட்சி இன்று மாற்றத்திற்காக போராடிய, போராடிக் கொண்டிருக்கிற கட்சியாக உள்ளது. இந்தக் கட்சியின் வரலாறு எள்ளளவும் அண்ணாமலை போன்ற அற்பர்களுக்கு தெரிய வாய்ப்பு கிடையாது.

வாய்க்கொழுப்பு நிறைந்த அண்ணாமலை எந்த கட்சி குறித்தும் என்ன வேண்டுமானாலும் பேசுவார். ஆளுநர் ரவியும், அண்ணாமலையும் விளம்பர பிரியர்கள். நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி, விடுதலை பெற்ற ஐந்து மாசத்துல மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற அமைப்பை சேர்ந்தவர்தான் அண்ணாமலை. அந்த அண்ணாமலையிடமிருந்து நாகரிகமான அரசியலை எதிர்பார்க்கக்கூடாது. எதிர்பார்த்தால் அது நமது தவறு’ இவ்வாறு அவர் கூறினார்.

The post 2014ல் மோடி கொடுத்த கேரண்டி என்னாச்சு: சொன்னாரே..! செஞ்சாரா..? முத்தரசன் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi ,Senjara ,India ,Party ,state secretary ,Mutharasan ,Erode district Gopi ,BJP ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி