×
Saravana Stores

ஜூன் 29 அமர்நாத் யாத்திரை தொடக்கம்

ஜம்மு: நடப்பு ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19ம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இங்கு பனி உறைந்து சிவலிங்க வடிவில் காட்சி தரும். இயற்கையாக உருவாகும் இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 வரை 62 நாட்களுக்கு நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெறும் என  அமர்நாத் ஆலய வாரியம் நேற்று அறிவித்தது. அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள 48 கிமீ நுன்வான்-பஹல்காம் பாதை மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள 14 கிமீ குறுகிய, ஆனால் செங்குத்தான பாதைகள் வழியாக பக்தர்கள் யாத்திரை செல்ல உள்ளனர். இதற்கான முன்பதிவுகள் இன்று தொடங்குகிறது.

The post ஜூன் 29 அமர்நாத் யாத்திரை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Amarnath Yatra ,Jammu ,Amarnath Cave Temple ,Himalayan ,South Kashmir ,Shivlinga ,Amarnath ,
× RELATED ஜம்மு நீதிமன்றத்தில் குண்டு வீச்சு