×

இன்று முதல் 61 நாட்களுக்கு அமல் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது

சென்னை: மீன்கள் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில் இன்று முதல் வருகிற ஜூன் 15ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, மீனவர்கள் யாரும் ஆழ்கடலுக்கு விசைப் படகுகளில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். ஏற்கனவே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகுகள் திரும்ப வந்துள்ளன இன்னும் சில படங்கள் இன்று கரைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சித்திரை திருநாள் என்பதால் ஆழ்கடலுக்கு தங்களது விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் விற்பனை அதிகம் ஆகும் என கருதி பெரிய வகை மீன்கள் மற்றும் சிறிய வகை மீன்களை பிடித்து வந்து அதிகாலை முதலே விற்பனை செய்ய இருந்தனர். மீன் பிரியர்களின் கூட்டம் யாரும் மீன் வாங்க வராததால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் நேற்று களையிழந்து காணப்பட்டது.

வஞ்சிரம், வவ்வால், சீலா, சங்கரா, கொடுவா, பாறை, திருக்கை உள்ளிட்ட பெரிய வகை மீன்களும் காணங்கத்தை, இறால், கடவாய், நெத்திலி உள்ளிட்ட சிறிய வகை மீன்களின் வரத்து நேற்று அதிகமாகவே காணப்பட்டது, மீன்களின் விலையும் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டது. எனவே சுற்று வட்டார பகுதியில் மீன் மார்க்கெட்டில் மீன்களை விற்பனை செய்வதற்காக மீனவ பெண்கள், சிறு வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர்.

இதனால் விசைப்படகு மீனவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். ஒரு சில விசைப்படகு மீனவர்கள் கூட்டம் மிகக் குறைவாகவும் ஆர்வமாக மீன் வாங்க வராதாலும் படகியிலிருந்து மீனை கரைக்கு இறக்காமல் உள்ளேயே தேக்கி வைத்துள்ளனர். 20ம் தேதி வரை இந்த மீன்கள் விற்கப்படும் என கூறப்படுகிறது.

பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் விசைப்படகு உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் காசிமேட்டில் மீன்பிடி துறைமுகத்தில் இனி எதிர்பாத்த அளவிற்கு மீன்கள் கிடைக்காது என்பதால் வெளிமாநில மீன்கள் விற்பனைக்கு வர கூடும் விலை உயர்வாக விற்பனை செய்யப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

The post இன்று முதல் 61 நாட்களுக்கு அமல் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...