×
Saravana Stores

மேலும் பல இந்திய வீரர்கள் மாலத்தீவிலிருந்து வெளியேறினர்: அதிபர் முய்சு தகவல்

மாலே: மாலத்தீவில் இருந்து மேலும் பல இந்திய வீரர்களும் சென்று விட்டதாக நாட்டின் அதிபர் முகமது முய்சு தெரிவித்தார். இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே நீண்ட காலமாக நல்லுறவு இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றார்.அவர் பதவியேற்ற உடன் முதலில் சீனாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பல தலைவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பாதுகாப்பு உள்பட பல துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. மாலத்தீவில் மருத்துவ சேவைக்கான ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு 88 இந்திய ராணுவ வீரர்கள் அந்த நாட்டில் இருந்தனர். அங்கு உள்ள ராணுவ வீரர்களை படிப்படியாக அகற்ற வேண்டும் என அதிபரானதும் இந்தியாவுக்கு முய்சு கோரிக்கை விடுத்தார். முய்சுவின் வேண்டுகோளை கடந்த மாதம் 11ம் தேதி மாலத்தீவில் இருந்து 26 வீரர்கள் தாயகம் திரும்பினர்.

இந்நிலையில்,மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முய்சு பேசும்போது,‘‘ ஏப்ரல் 9ம் தேதி, இரண்டாவது படையும் மாலத்தீவை விட்டு வெளியேறிவிட்டது. கடைசியாக ஒரு குழு மட்டும் இருக்கிறது. அவர்களும் மே 10 ம் தேதிக்கு முன்பே மாலத்தீவை விட்டு வெளியேறுவார்கள். நான் எனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் ’’ என்றார்.

The post மேலும் பல இந்திய வீரர்கள் மாலத்தீவிலிருந்து வெளியேறினர்: அதிபர் முய்சு தகவல் appeared first on Dinakaran.

Tags : Maldives ,President ,Muisu ,Mohammad Muisu ,India ,Mohammed Muisu ,Dinakaran ,
× RELATED UPI வசதியை, மாலத்தீவில் அறிமுகம் செய்தார் அதிபர் முகமது முய்சு