டெல்லி: இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனம் இவ்வாறு அறிவித்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை கருத்தில் கொண்டு டாடா குழும நிறுவனமான ஏர் இந்தியா, இஸ்ரேலுக்கான அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அக்டோபர் 7, 2023 அன்று இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவையை விமான நிறுவனம் நிறுத்தியது. ஏனெனில் அந்த நேரத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் (இஸ்ரேல்-ஹமாஸ் போர்) தீவிரமடைந்ததை அடுத்து பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் மார்ச் 3, 2024 அன்று, நிறுவனம் டெல்லியிலிருந்து டெல் அவிவ் வரை விமான சேவையைத் தொடங்கியது. இந்நிலையில் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் இன்று மீண்டும் இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
The post இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.