×
Saravana Stores

வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் 11 நாள் சித்திரை திருவிழா கொடியேற்றம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் நடைபெறும் 11 நாள் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருக்கழுக்குன்றத்தில் பட்சி தீர்த்தம் என அழைக்கப்படும் மலைமேல் வீற்றிருக்கும் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்களுக்கு சித்திரை திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை வருடப் பிறப்பான இன்று காலை வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் 11 நாள் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக, வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, இன்று காலை கொடிமரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் செயல் அலுவலர் புவியரசு, கோயில் மேலாளர் விஜயன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இதன் 3ம் நாள் உற்சவமாக, வரும் 16ம் தேதி 63 நாயன்மார்களின் வீதியுலா நடைபெறுகிறது. கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு, மலைக்கோயிலை சுற்றிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

The post வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் 11 நாள் சித்திரை திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : 11-day Chitra festival ,Vedakriswarar hill temple ,Thirukkalukkunram ,-day painting festival ,Thirukkalukukunram ,Sami ,Vedakriswarar temple ,Patsi Theertha ,11-day Chitrai festival ,Vedakriswarar mountain temple ,
× RELATED திருக்கழுக்குன்றம் அருகே கட்டி...