×

கோவை, திருச்சியில் ரூ.3 ஆயிரம் கோடியில் ராணுவ காரிடர் திட்டம் என்னாச்சு?: அண்ணாமலையை விளாசும் பெண்

கோவை: கோவை, திருச்சியில் ரூ.3 ஆயிரம் கோடியில் ராணுவ காரிடர் திட்டம் தொடங்கப்படும் என கூறியது என்னாச்சு என்று இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவர் அண்ணாமலையை விளாசி வருகிறார். கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை குறித்து கோவையை சேர்ந்த சிந்துஜா ராஜேந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: நிர்மலா சீதாராமன் 2018ல் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது கோவை, திருச்சி மாநகரங்களுக்கு பாதுகாப்பு காரிடர் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி 3 ஆயிரம் கோடி. ஆனால் 2019க்கு பின்னர் அந்த திட்ட வெப்சைட்டில் அது குறித்த எந்த தகவலும் இடம்பெறவில்லை. 3 ஆயிரம் கோடி என்னாச்சுனு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க அண்ணாமலை’’ என்று கூறியுள்ளார்.

மற்றொரு வீடியோவில், ‘‘வைரத்துக்கு பெயர் போன ஊர் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத். இதுக்கு 1.5 சதவீத ஜிஎஸ்டி. நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நிற்கும் இடம் கோயம்புத்தூர். இங்கு பல லட்சம் குடும்பங்களை வாழ வைப்பது டெக்ஸ்டைல், பவுண்டரி தொழில். டெக்ஸ்டைல் துறையில் காட்டனுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி, நூலுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி. பவுண்டரிக்கு சுமார் 18 சதவீத ஜிஎஸ்டி, ஒன்றியத்தில் 10 ஆண்டுகளாக பாஜ அரசு இருக்கு. ஆனால் ஆடம்பர பொருளான வைரத்துக்கு ஜிஎஸ்டி-ஐ ஏத்திட்டு, பல லட்சம் குடும்பங்களை வாழவைக்கும் டெக்ஸ்டைலுக்கு, பவுண்டரிக்கு ஜிஎஸ்டியை குறைத்திருக்கலாமே அண்ணாமலை’’ என சிந்துஜா ராஜேந்திரன் விளாசியுள்ளார். இவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

The post கோவை, திருச்சியில் ரூ.3 ஆயிரம் கோடியில் ராணுவ காரிடர் திட்டம் என்னாச்சு?: அண்ணாமலையை விளாசும் பெண் appeared first on Dinakaran.

Tags : RS ,KOWAI, TRICHI ,ANNAMALAYA ,Goa ,Annamalai Vlasi ,Goa, Trichy ,Chintuja Rajendran ,BJP ,Annamalai ,Goa, Trischi ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...