சென்னை: இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று டெல்லியில் மக்களவை தேர்தலுக்கான அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். அதில் 30க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படும். பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இந்தியாவை 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம் என்று வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தது.
பாஜக வாக்குறுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை என்று கூறியுள்ளார். பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது. நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டிவருகிறது. சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்
அம்பேத்கரின் பிறந்தநாளில் அரசியல் தலைவர்கள் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அம்பேத்கர் பிறந்தாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கும் – அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள், சென்னை மேயர் ப்ரியா உள்ளிட்டோர் “சமத்துவ நாள் உறுதிமொழி” ஏற்றனர்.
The post பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.