நீடாமங்கலம், ஏப். 14: உடல் ஆரோக்கியம் சீராக இருக்க இயற்கை உணவு எடுத்து கொள்வது மிகவும் நல்லது என்று நீடாமங்கலத்தில் நடந்த வேளாண் மாணவர்கள் பயிற்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது. நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் தஞ்சை ஆர். வி. எஸ். வேளாண்மைக் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் 11 பேர் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டம் (RAWE) காரணமாக கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சியில் வேளாண் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு பயிற்சி மூலம் தெரிவித்தல் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இதில் ஒரு நிகழ்வாக நீடாமங்கலம் அருகில் உள்ள ரிஷியூர் கிராமத்தில் இயற்கை விவசாயி செந்தில் குமார் என்பவரை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில் வேளாண் கல்லூரி மாணவர்கள் ஆஸ்டின்ராஜ், அபிஷேக் நாயர், தெய்வம் பிராபாகரன், அபிஷேக், அறிவழகன், அனாஸ், அறிவுமதி, தனுஷ், அசோக் குமார், பரத் குமார், கோகுல் பிரசாத் என மொத்தம் 11 மாணவர்கள் கலந்து கொண்டனர். இன்றைய சூழலில் இயற்கை விவசாயமும், இயற்கை உணவும் ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இயற்கை உணவு என்பது செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் அல்லது பிற ரசாயன சேர்ப்புகள் இல்லாமல் வளர்க்கப்படும் உணவைக் குறிக்கிறது.
இயற்கை உணவுகள் சில சமயங்களில் பாரம்பரிய உணவுகளை விட விலை அதிகமாக இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும் இயற்கை உணவுகளை உண்பதன் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் பெரும்பாலான மக்களுக்கு கூடுதல் செலவுகளை ஈடுசெய்கின்றன.
இந்தியாவில் இயற்கை உணவுகளுக்கு அதிகரித்து வரும் தேவை உள்ளது. இதன் விளைவாக நாடு முழுவதும் பல இயற்கை உணவு கடைகள் மற்றும் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இயற்கை உணவு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்க இயற்கை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலும் இயற்கை விவசாயம் சார்ந்த பல்வேறு தகவல்களை கேட்டறிந்தனர்.
The post உடல் ஆரோக்கியம் சீராக இருக்க இயற்கை உணவு எடுத்து கொள்வது மிகவும் நல்லது வேளாண் மாணவர்கள் பயிற்சியில் விளக்கம் appeared first on Dinakaran.