- சித்திரை திருநாள்
- சென்னை
- தமிழ் புத்தாண்டு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எடப்பாடி பழனிசாமி
- அதிமுக
- ``குரோதி''
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): மலர இருக்கும் `குரோதி’ ஆண்டு, எல்லா மக்களுக்கும் அன்பையும், நிறைந்த ஆரோக்கியத்தையும், மிகுந்த சந்தோஷத்தையும், பல்வேறு வெற்றிகளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைந்திட தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கிறேன்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ஒன்றிய பாஜ அரசால் தமிழர்களின் உரிமைகளும், தன்மானமும் பறிக்கப்பட்டு வருவதை மீட்டெடுக்கவும், தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையிலும் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். வைகோ (மதிமுக): மலர்ந்திருக்கும் இந்த சித்திரை, தமிழரின் நித்திரைக்கு முடிவு கட்டி எட்டு திக்கும் சங்கொலிக்கட்டும் என தரணி வாழ் தமிழர்களுக்கெல்லாம் வாழ்த்துகள்.
ராமதாஸ் (பாமக): தமிழ் மக்களுக்கு அனைத்து வகையான நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க சித்திரைத் திருநாளில் நாம் உறுதியேற்று கொள்வோம். இதுபோல, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திருநாவுக்கரசர், அன்புமணி, ஜி.கே.வாசன், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், டி.டி.வி.தினகரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், வி.கே.சசிகலா, ேகாகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க தலைவர் சேம.நாராயணன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
The post சித்திரை திருநாள் கட்சித்தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.