×
Saravana Stores

வாகன சோதனையில் ₹1.62 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி, ஏப். 14: கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில், வேட்பாளர்களுக்கு பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தொகுதி முழுவதும் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தியாகதுருகம் புறவழிச்சாலை பகுதியில் உணவகம் அருகே பறக்கும்படை அதிகாரி அசோக் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வழியாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் எவ்வித ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 200 பணம் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், உளுந்தூர்பேட்டை அடுத்த எறையூர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அந்தோணிசாமி(55) என்பதும் இவர் தியாகதுருகம் வார சந்தையில் மாடு வாங்குவதற்கு கடன் வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை என கூறி அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லூர்துசாமியிடம் பறக்கும்படை குழுவினர் பணத்தை ஒப்படைத்தனர். அந்த பணத்தை அதிகாரிகள் கள்ளக்குறிச்சி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

The post வாகன சோதனையில் ₹1.62 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Parliamentary Constituency ,Election Flying Force ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளியில் புறக்கணிப்பதாக கூறி...