×

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு: கனகாம்பரம் கிலோ ₹1000

சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு புறநகர் பகுதிகளான செங்குன்றம், தாம்பரம், பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பூக்கள் வருகின்றன.

இன்று தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு, கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு நேற்று பூக்கள் அதிக அளவில் வந்து குவிந்தன. அதேசமயம் பூக்கள் தேவை அதிகரித்த நிலையில் விலை கடுமையாக உயர்ந்தது. ஏராளமான சிறு வியாபாரிகள் அதிகாலை முதலே மல்லி, முல்லை, சாமந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். கிலோ அளவில் மல்லி மற்றும் ஐஸ் மல்லி ₹500, காட்டு மல்லி ₹400, முல்லை, ஜாதிமல்லி ₹450, கனகாம்பரம் ₹1000, ₹சாமந்தி 300, சம்பங்கி ₹250, அரளிப்பூ ₹400, பன்னீர் ரோஸ் ₹140, சாக்லேட் ரோஸ் ₹160 என விற்பனை செய்யப்பட்டது.

The post தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு: கனகாம்பரம் கிலோ ₹1000 appeared first on Dinakaran.

Tags : Tamil New Year ,Koyambedu ,Kanakambaram ,CHENNAI ,Sengunram ,Thambaram ,Poontamalli ,Chengalpattu ,Thiruvallur ,Kanchipuram ,Ranipet ,
× RELATED துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன்...