×

பா.ஜ 200ஐக்கூட தாண்டாது

ஜல்பைகுரி: மக்களவைத் தேர்தலில் பாஜ 200 இடங்களைக் கூட வெல்லாது என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது: மக்களவை தேர்தலில் பாஜ 200 இடங்களைக் கூட வெல்லாது. மேற்குவங்கத்திற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? பிரதமர் மோடியின் ‘உத்தரவாதங்களுக்கு’ இரையாகிவிடாதீர்கள். இவை தேர்தல் பொய் தவிர வேறில்லை. பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய நாட்டின் அரசியலமைப்பை நீங்கள் (பாஜ ) அழித்துவிட்டீர்கள். இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.

The post பா.ஜ 200ஐக்கூட தாண்டாது appeared first on Dinakaran.

Tags : BJ ,Jalpaiguri ,Mamata Banerjee ,BJP ,Lok Sabha elections ,Trinamool Congress ,Chief Minister ,Jalpaiguri, West Bengal ,Baj ,Dinakaran ,
× RELATED நாளை இந்தியா கூட்டணி தலைவர்களுடன்...