×

அவரும் ஒரு சாதாரண பாஜ ஊழியர்தான்… அமித்ஷாவை பார்த்து பயமா? எனக்கா? குஜராத் காந்திநகர் தொகுதி காங். வேட்பாளர் சரவெடி

காந்திநகர்: குஜராத் காந்திநகர் பாஜ வேட்பாளர் அமித் ஷாவை எதிர்த்து போட்டியிட நான் பயப்படவில்லை” என காந்திநகர் காங்கிரஸ் வேட்பாளர் சோனால் படேல் கூறி உள்ளார். குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் மே 7ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்குள்ள காந்திநகர் மக்களவை தொகுதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணைபிரதமர் அத்வானி ஆகியோர் போட்டியிட்டதால் பாஜ கோட்டையாக கருதப்படுகிறது. இங்கு வரவுள்ள தேர்தலில் பாஜ வேட்பாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக கட்டிட கலைஞரான சோனால் படேல்(62) போட்டியிடுகிறார். காங்கிரஸ் கமிட்டி செயலாளரான சோனால் படேல் மும்பை மற்றும் மேற்கு மகாராஷ்டிராவின் காங்கிரஸ் இணைப்பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சோனால் படேல் பேட்டி அளித்தார். அப்போது, “குஜராத் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறி விட்டதால் ஆட்சிக்கு எதிரான போக்கு நிலவுகிறது. அமித் ஷா ஒன்றிய உள்துறை அமைச்சராக இருக்கலாம். ஆனால் அவரும் ஒரு சாதாரண பாஜ ஊழியர். அவரை எதிர்த்து போட்டியிட எனக்கு எந்த தயக்கமும் இல்லை” என்று கூறினார்.

The post அவரும் ஒரு சாதாரண பாஜ ஊழியர்தான்… அமித்ஷாவை பார்த்து பயமா? எனக்கா? குஜராத் காந்திநகர் தொகுதி காங். வேட்பாளர் சரவெடி appeared first on Dinakaran.

Tags : amit shah ,Gujarat Gandhinagar Constituency Cong ,Saravedi ,Gandhinagar ,Gujarat Gandhinagar ,BJP ,Gandhinagar Congress ,Sonal Patel ,Sabha ,Gujarat ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்:...