×

பெண்களை முன்னிறுத்தி பல திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்: நிர்மலா சீதாராமன் பேச்சு

திருப்பூர்: பெண்களை முன்னிறுத்தி பல திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவாக அவிநாசியில் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். திருப்பூர், அவிநாசியில் பெண்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். ஏழைளுக்கு கழிப்பிட வசதி, கான்கிரீட் வீடு என பல திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். சுய உதவிக்குழு பெண்களுக்கு திட்டம் தீட்டி குழுவினரிடமே பணம் கொடுத்து உதவியுள்ளோம் என தெரிவித்தார்.

The post பெண்களை முன்னிறுத்தி பல திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்: நிர்மலா சீதாராமன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Nirmala Sitharaman ,Tirupur ,Modi ,Avinasi ,BJP ,L. Murugan ,Nilgiri ,
× RELATED பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி நாளை சந்திப்பு