×

சவூதி அரேபிய சிறையில் இருந்து கோழிக்கோடு இளைஞர் விடுதலை.. தூக்குத் தண்டனைக்கு மூன்று நாள் முன்பு ரூ.34 கோடி திரட்டல்!!

திருவனந்தபுரம்: சவூதியில் தூக்கு தண்டனையில் சிக்கிய கேரள இளைஞரை ரூ.34 கோடி பொதுநிதி திரட்டி அம்மாநில மக்கள் தூக்கு தண்டனையில் இருந்து மீட்டுள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள ஃபெரோக்கைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அப்துல் ரஹீம், சவூதி அரேபியாவிற்கு கடந்த 2002ம் ஆண்டில் சென்றுள்ளார். அங்கு மாற்றுத் திறனாளி சிறுவனை பராமரிக்கும் பணியில் சேர்ந்தார் ரஹீம். ஒருநாள் காரில் அந்த சிறுவனை அழைத்துச் செல்லும் போது, சிவப்பு சிக்னலை தாண்டி காரை ஓட்டுமாறு சிறுவன் கூற ரஹீம் மறுத்துள்ளார். அப்போது ரஹீம் மீது எச்சிலை துப்பி அந்த சிறுவன் அடிக்க, தவறுதலாக சிறுவனின் சுவாசகருவியை ரஹீம் தொட்ட போது, அந்த கருவி கையோடு வந்துவிட, எதிர்பாராத விதமாக அந்த சிறுவன் இறந்தான்.

சிறுவனின் குடும்பத்தினர் பொது மன்னிப்பு வழங்க மறுத்ததால் சவூதி சட்டப்படி கடந்த 18 ஆண்டுகளாக ரஹீம் சிறையில் வாடி உள்ளார். அவருக்கு கடந்த 2018ல் தூக்கு தண்டனை விதித்த சவூதி உச்சநீதிமன்றம், கடந்த 2022ல் அந்த தண்டனையை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் தியா எனப்படும் இழப்பீடு பணத்தை பெற்றுக் கொள்ள சிறுவனின் குடும்பத்தினர் சம்மதித்ததால் இந்திய மதிப்பில் ரூ.33 கோடியை 24 லட்சம் வழங்க வேண்டி இருந்தது. இதற்காக கேரள மாநிலம் கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் பொது நிதி திரட்டப்பட்டது. சவூதி தலைநகர் ரியாத்தில் இருக்கும் கேரள மக்களும் நிதி அளித்ததை அடுத்து அப்துல் ரஹீம் சவுதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். கேரள மக்களின் இந்த மனிதாபிமான உதவி பலரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post சவூதி அரேபிய சிறையில் இருந்து கோழிக்கோடு இளைஞர் விடுதலை.. தூக்குத் தண்டனைக்கு மூன்று நாள் முன்பு ரூ.34 கோடி திரட்டல்!! appeared first on Dinakaran.

Tags : Arabian ,Thiruvananthapuram ,Ammannitsa ,Saudi Arabia ,Abdul Raheem ,Feroc ,Kerala ,Kozhikode ,
× RELATED குமரியில் ஒரே நேரத்தில் சூரியன் அஸ்தமனம், சந்திரன் உதயம்