×

மேட்டூர் அணை நீர்மட்டம் 56.83 அடியில் இருந்து 56.63 அடியாக தொடந்து சரிவு

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 56.83 அடியில் இருந்து 56.63 அடியாக குறைந்தது; நீர் இருப்பு 22.24 டிஎம்சி-யாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 68 கனஅடியிலிருந்து 80 கன அடியாக அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் நீர் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இந்த மேட்டூர் ஆணை வழங்குகி வருகிறது.

நேற்று (ஏப்ரல் 12) காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 57. 03 அடியில் இருந்து 56. 83 அடியாகக் குறைந்துள்ள நிலையில், நீர் இருப்பு 22. 38 டி. எம். சி. யாக இருந்தது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 43 கனஅடியில் இருந்து 68 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை மின்நிலையம் வழியாக குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறப்பு விநாடிக்கு 1, 500 கனஅடியாக உள்ளது.

இந்நிலையில் இன்று(ஏப்ரல் 13) மேட்டூர் அணை நீர்மட்டம் 56.83 அடியில் இருந்து 56.63 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 22.24 டிஎம்சி-யாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 68 கனஅடியிலிருந்து 80 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை மின் நிலையம் வாயிலாக குடிநீர் தேவைக்கு நீர்த்திறப்பு விநாடிக்கு 1,500 கனஅடியாக உள்ளது.

கோடை காலத்தில் சூரியன் சுட்டெரித்து வரும் நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 56. 83 அடியாகக் குறைந்துள்ள நிலையில், இன்று 56.63 அடியாக குறைந்தது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மேட்டூர் அணை நீர்மட்டம் 56.83 அடியில் இருந்து 56.63 அடியாக தொடந்து சரிவு appeared first on Dinakaran.

Tags : Mettur ,Salem ,Mettur dam ,Cauvery river ,Salem district ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!