- இஸ்ரேல்
- எங்களுக்கு
- ஜனாதிபதி ஜோ பிடென்
- ஈரான்
- வாஷிங்டன்
- ஜனாதிபதி
- ஜோ பிடன்
- ஐக்கிய மாநிலங்கள்
- ஜோ
- தின மலர்
வாஷிங்டன்: இஸ்ரேலை தாக்க வேண்டாம் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலை பாதுகாப்பதற்கான தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும். இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
டமாஸ்கஸ் நகரில் இருந்த ஈராவின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரபு தாக்குதல் நடத்தியது. இதில், ஏராளின் 3 முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான் இஸ்ரேல் மீறு நாக்குதல் நடந்த திட்டமிட்டுள்ளது.
இதுபற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளதாவது; நான் உறுதியான தகவலுக்குள் போக விரும்பவில்லை, ஆனால், இஸ்ரேல் மீது ஈராள் காலதாமதமின்றி விரைவில் தாக்குதல் நடத்த கூடும் என எதிர்பார்க்கிறேன். நாங்கள் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். நாங்கள் இஸ்ரேலை ஆதரிப்போம். இஸ்ரேலை பாதுகாக்க உதவுவோம், ஈரான் வெற்றிபெறாது” என்று அவர் கூறினார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளைப் பாதுகாக்க அமெரிக்கா போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது, இஸ்ரேல் மீதான ஈரானின் நேரடித் தாக்குதலை வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை(இன்று) விரைவில் வரலாம் என்று நம்புகிறது என் தகவல் வெளியாகியுள்ளது.
The post இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை appeared first on Dinakaran.