×

தூத்துக்குடியில் கனிமொழிக்கு ஆதரவாக அமைச்சர் கீதாஜீவன் இஸ்லாமியர்களிடம் பிரசாரம்

தூத்துக்குடி : தூத்துக்குடி ஜாமியா பள்ளி வாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அமைச்சர் கீதாஜீவன், திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகளை கூறி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமிய மக்களிடம், திமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறி சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக விளங்கும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கனிமொழி எம்.பி.க்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், பட்சிராஜன், ராஜதுரை, சுயம்புலிங்கம், நாகேஸ்வரி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், வட்டச்செயலாளர் கங்காராஜேஷ், வட்டப்பிரதிநிதி திலகர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, திமுக மகளிர் அணி ரேவதி, சத்யா, மற்றும் செந்தில்குமார், மணி, அல்பர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடியில் கனிமொழிக்கு ஆதரவாக அமைச்சர் கீதாஜீவன் இஸ்லாமியர்களிடம் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Geethajeevan ,Muslims ,Kanimozhi ,Thoothukudi ,DMK ,Jamia ,School ,India Alliance ,general secretary ,
× RELATED மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக...