×

மதுரை எய்ம்ஸ் 9 ஆண்டுகளாகியும் ஏன் கட்டப்படவில்லை?: தமிழ்நாடு செல்லும் பிரதமர் மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

டெல்லி: தமிழ்நாடு செல்லும் பிரதமர் மோடிக்கான இன்றைய கேள்விகள் என்று ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்துள்ளார். இன்றைய கேள்விகள் என்று 3 கேள்விகளை மோடியிடம் கேட்டு ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார். 2016-ல் மிகப்பெரிய விளம்பரம் செய்து பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் 9 ஆண்டுகளாகியும் ஏன் கட்டப்படவில்லை. 10 ஆண்டு பாஜக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் ஏன் ஒரு முதன்மை கல்வி நிறுவனத்தை கூட மோடி அரசு அமைக்கவில்லை. சப்கா சாத், சப்கா விகாஸ் எங்கே மோடி ஜீ என்று அடுக்கடுக்கான கேள்விகளை ஜெய்ராம் ரமேஷ் கேட்டுள்ளார்.

The post மதுரை எய்ம்ஸ் 9 ஆண்டுகளாகியும் ஏன் கட்டப்படவில்லை?: தமிழ்நாடு செல்லும் பிரதமர் மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Madurai AIIMS ,Jairam Ramesh ,PM Modi ,Tamil Nadu ,Delhi ,Modi ,X ,
× RELATED சில மாநிலங்களில் பாஜக...