*ஆசிரியர்கள் புதுமுயற்சி
ஆட்டையாம்பட்டி : பள்ளி கல்வித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக, ஆட்டையாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நூதன முறையில் மாணவர் சேர்க்கையில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 2024-25 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில், தனியார் பள்ளிகள் நோட்டீஸ் கொடுத்தும், பேனர் வைத்தும் மாணவர்களை அட்மிஷனுக்கு அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆட்டையாம்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில், தமிழக பள்ளி கல்வி வரலாற்றிலேயே புதிய முயற்சியாக, மிஸ்டு கால் கொடுத்தால், வீடு தேடி வந்து உங்கள் வீட்டு திண்ணையில், உங்கள் குழந்தைகளுக்கு அட்மிஷன் கொடுக்கப்படும் என்று பள்ளியில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக மிஸ்டு கால் கொடுத்தால் கட்சியில் உறுப்பினராக சேர்க்கவும், தனிநபர் கடன், வாகன கடன் வாங்கவும், ஜீரோ சதவிகித வீட்டு உபயோக பொருட்கள் வாங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அழைப்பு விடுக்கும்.
அதே பாணியில் அரசு பள்ளியில் மிஸ்டு கால் கொடுத்தால், வீடு தேடி வந்து அட்மிஷன் கொடுக்கிறோம் என தெரிவித்து, பள்ளியின் தொலைபேசி எண் மற்றும் தலைமை ஆசிரியர் போன் நம்பர் அச்சிட்டு பள்ளி சுவற்றில் பேனர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், அந்த பேனரில் 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை, அரசு பள்ளியில் படித்தால் மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகள் முழுவதும், அரசு செலவில் படிக்க வாய்ப்பு உள்ளது. தனியார் பள்ளியில் உள்ளதை போல், இப்பள்ளியிலும் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆட்டையாம்பட்டி அரசு பள்ளியில் நூதனம் மிஸ்டு கால் கொடுத்தால் வீடு தேடி வந்து அட்மிஷன் appeared first on Dinakaran.