×

2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்

* ஆலைகளுக்கும் அனுப்பப்படுகிறது

* மதிப்பு கூட்டியும் விற்கப்படுகிறது

கரூர் : கரூர் மாவட்டம் 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் கரும்புகள் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் மதிப்பு கூட்டப்பட்டும் விற்பனை செய்யப்படுகிறது.தமிழ்நாட்டில் கரும்பு பொதுவாக டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை மூன்று பட்டங்களில் அதிகமாக நடவு செய்யப்படுகின்றது.

இது தவிர திருச்சி, பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தனிப்பட்டமாக கரும்பு நடவு செய்யப்படுகிறது. கரும்பு நன்கு முதிர்ந்த பின்பு அறுவடை செய்ய வேண்டும். பொதுவாக நடவு செய்த 12 – 18 மாதத்தில் அறுவடை செய்யலாம். நிலத்திலிருந்து 2 முதல் 3 செ. மீ வரை விட்டு வெட்ட வேண்டும். கரும்பு உற்பத்தியில் உலக அளவில் பிரேசில் முதன்மை நாடாக திகழ்கிறது.

அதற்கு அடுத்தபடியாக இந்தியா சைனா ஆகிய நாடுகள் கரும்பை உற்பத்தி செய்து வருகின்றன.இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி அதிகரித்து வருகிறது காரணம் கரும்பு ஒரு பணப்பயிராக கருதப்படுவதால் அதற்கு என்றும் நல்ல வரவேற்பு இருப்பதால் கரும்பை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

கரும்பை பொருத்தமட்டில் ஆலை கரும்பு கடி கரும்பு என்று இரண்டு வகை கரும்புகள் உற்பத்தி செய்து ஆலை கரும்பு முழுமையாக சர்க்கரை ஆலைக்கும் கருப்பு நிற கரும்பை நாம் உண்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.ஒரு காலத்தில் பொங்கல் நேரத்தில் மட்டுமே கடி கரும்பு விற்பனைக்கு வரும். ஆனால் தற்போது எல்லா நேரங்களிலும் கரும்பு எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது. ஆலை கரும்பு பால் எடுப்பதால் கிராமம் மற்றும் நகரங்களில் அதிக அளவில் சிறிய சிறிய கடைகள் மூலம் பெருமபளவில் விற்பனை செய்யப்படுகிறது. கரும்பை கொண்டு விவசாயிகள் நேரடியாக நாட்டுச் சர்க்கரை தயார் செய்து அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் கரூர், வாங்கல், லாலாபேட்டை ,நொய்யல், பச்மாதேவி, சேமிங்கி வேட்டமங்கலம் ஆகிய பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கரூர் மாவட்டத்தில் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது வரும் காலங்களில் சாகுபடி அளவு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur district ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...