- தேர்தல் அதிகாரிகள்
- குடவாசல் தாலுக்கா
- நன்னிலம்
- சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- இந்தியா
- 18வது லோக்சபா தேர்தல்
நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1691 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மூன்றாவது கட்ட பயிற்சி நாளை குடவாசல் தாலுகாவில் உள்ள சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்தியாவின் 18 வது லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இதில் தமிழகத்துக்கு முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் தொடர்பான பல்வேறு முன்னெடுப்பு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தேர்தலில் பண பட்டுவாடா உள்ளிட்டவர்களை கண்காணிக்கும் பொருட்டு பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் பாராளுமன்றம் மற்றும் நன்னிலம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாகன சோதனைகள் மேற்கொள்ளும் விதமாக மூன்று பறக்கும் படை குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எட்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி மற்றும் 169.நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட நன்னிலம் குடவாசல் வலங்கைமான் தாலுக்காவை சேர்ந்த 1691 வாக்கு சாவடி அலுவலர்களுக்கான இரண்டு கட்ட பயிற்சிகள் சுவாமி தயானந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிலையில் மூன்றாவது கட்ட பயிற்சி வகுப்பு இன்று நடைபெறுகிறது.
The post குடவாசல் தாலுகாவில் 1691 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.