- ஆயக்காரன்புலம்
- கலிதீர்த்தம்
- அய்யனார் கோவில் பொன் குதிரை திருவிழா
- வேதாரண்யம்
- அய்யனார்
- ஆயக்காரன்புலம்
- சுவாயாம்பூ
- சித்தர் கலிதீர்த்தம்
வேதாரணயம், ஏப்.13:வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஐயனார் ஆலயம். இந்த ஆலயத்தில் சுயம்பு உருவில் அய்யனார் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் அருள்வாக்கு சித்தர் கலீதீர்தான்அருள்வாக்கில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு திருமண தடை நீக்கம், குழந்தை பாக்கியம் கிடைத்து பயனடைந்துள்ளனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் தங்கக் குதிரை எடுக்கும் விழா நடைபெறும் இந்த ஆண்டு தங்க குதிரை எடுக்கும் திருவிழா நாளை மாலை 3 மணிக்கு ஆயக்காரன்புலம் செல்லியம்மன் கோயிலில் இருந்து பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளோடும் கேரள ஜெண்ட மேளம் நாதஸ்வரம் முளைப்பாரி எடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக வந்து ஆயக்கரம்பலம் அய்யனார் கோயில் அடைந்து பின்பு அய்யனாருக்கு பால் அபிஷேகம் நடைபெறும்.
இரவுஆலயத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ராம நாடகமும் நடைபெறும். நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜயனாரை வழிபடுவார்கள். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.
The post ஆயக்காரன்புலம் கலீதீர்த்த ஐயனார் ஆலய தங்க குதிரை திருவிழா appeared first on Dinakaran.