×

100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத் திறனாளிகள் வாகன விழிப்புணர்வு பேரணி: மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர், ஏப். 13: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வாகன (ஸ்கூட்டர்) தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்டத் தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். மக்களவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வாகன (ஸ்கூட்டர்) தேர்தல் விழிப்புணர்வு பேரணி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் இருந்து திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக காமராஜர் சிலை வரை சென்று முடிவடையும் இந்த விழிப்புணர்வு பேரணியில் பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்போம், எனது வாக்கு எனது எதிர்காலம், வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம், எனது வாக்கு எனது உரிமை, தவறாமல் வாக்களிப்பது வாக்காளர் கடமை, நமது இலக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு, தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, ஓட்டுக்கு வாங்க மாட்டோம் நோட்டு என்ற பதாகைகளை ஏந்தி பொது மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்து உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு குறித்து கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) சத்ய பிரசாத், (பொது) வெங்கட்ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத் திறனாளிகள் வாகன விழிப்புணர்வு பேரணி: மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Disability Vehicle Awareness Rally on ,District Election Officer ,Thiruvallur ,Tiruvallur ,Perunditta ,Dinakaran ,
× RELATED மேனகா காந்தி வேட்பு மனு தாக்கல்