×

குளிக்க தடைவிதிப்பு

தென்காசி, ஏப். 13: தென்காசியில் நேற்று முன்தினம் இரவு முதல் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக மெயினருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குற்றாலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயில் வாட்டி வந்தது. பகல் வேளைகளில் இதுவரை காணாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயில் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அவ்வப்போது பலத்த மழை பெய்தது. திடீர் மழையின் காரணமாக மெயினருவியில் நேற்று காலை முதல் சற்று தண்ணீர் விழத் துவங்கியது. நேற்று பகல் முழுவதும் அவ்வப்போது சற்று மழை பெய்தது. வெயில் இல்லை. மாலையில் தண்ணீர் வரத்து அதிகரித்து மெயினருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவியில் தடை விதிக்கும் அளவிற்கு தண்ணீர் விழுந்தாலும் கோடை மழை என்பதால் தண்ணீர் வரத்து ஒரு சில தினங்களுக்கு கூட நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

The post குளிக்க தடைவிதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Mainaruvi ,Courtalam ,Dinakaran ,
× RELATED குற்றாலம் அருவிகள் வறண்டு காட்சி அளித்த நிலையில் தற்போது இடியுடன் மழை!