×

கொரியர் வேன் கவிழ்ந்து டிரைவர் பலி மற்றொரு விபத்தில் இன்ஜினியர் உயிரிழப்பு

மேலூர் / திருப்பரங்குன்றம், ஏப். 13: கொட்டாம்பட்டி அருகே கொரியர் வேன் கவிழ்ந்த விபத்தில், டிரைவர் பரிதாபமாக பலியானார். நாகர்கோயிலை அடுத்த சுசீந்திரத்தை சேர்ந்தவர் முருகன்(48). டிரைவரான இவர், சென்னையிலிருந்து தனியார் கொரியர் நிறுவன வேனில் பார்சல்களை ஏற்றிக் கொண்டு திருநெல்வேலி நோக்கி புறப்பட்டார். இவரது வேன் நேற்று மாலை கொட்டாம்பட்டி பகுதியில் வந்தபோது, காடம்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்து கண்மாய்க்குள் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலே பலியானார். கிளீனர் மைதீன் அதிஷ்டவசமாக காயமின்றி தப்பினார். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டை மின்வாரிய காலனியை சேர்ந்தவர் அஸ்டின்(43). இன்ஜினியரான இவரது மனைவி உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அஸ்டின் வாடிப்பட்டி சாலையில் அஸ்டின் ஓட்டிச்சென்ற கார், துவரிமான் கண்மாய்க்கு முன்பாக நிலை சாலையோர தடுப்புச்சுவரில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அஸ்டின் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து வழக்கு பதிந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார், அஸ்டின் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கொரியர் வேன் கவிழ்ந்து டிரைவர் பலி மற்றொரு விபத்தில் இன்ஜினியர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Malore ,Thiruparangunram ,Kotampatti ,Murugan ,Susindra ,Nagarkoil ,Chennai ,Tirunelveli ,
× RELATED மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2...