- திமுக
- ராஜபாளையம்
- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.
- தென்காசி
- அனைத்து இந்தியாவும்
- தென்காசி நாடாளுமன்ற தொகுதி
- ராஜபாளையம் தொகுதி
- டாக்டர்
- ராணி ஸ்ரீகுமார்
- ராஜபாளையம் சட்டப்பேரவை…
- தின மலர்
ராஜபாளையம், ஏப். 13: தென்காசி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜபாளையம் பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். ராஜபாளையம் தொகுதியில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர். டாக்டர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் வாக்குகள் சேகரித்தனர்.
சுந்தரராஜபுரம், கணபதிசுந்தரநாச்சியார்புரம், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரநாச்சியார்புரம், அயன்கொல்லங்கொண்டான், நக்கனேரி, தெற்குவெங்காநல்லூர், சிதம்பராபுரம், பட்டியூர், ஜமீன்கொல்லங்கொண்டான், இளந்திரைகொண்டான், அம்மையப்பபுரம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.
பிரசாரத்தில் பேசுகையில், இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாகவும் ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும், வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகைக்கான (மினிமம் பேலன்ஸ்) அபராதம் நீக்கப்படும் மற்றும் ஜிஎஸ்டி திருத்தம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தனுஷ் எம்.குமார் எம்பி , மாவட்ட துணை செயலாளர் வாரியதுணைத் தலைவர் ராஜா அருண்மொழி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, ஒன்றிய துணை சேர்மன். துரை கற்பகராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் .வேல்முருகன் கூட்டுறவு சங்க .பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர்கள். பூமாரிமாரிமுத்து, வள்ளிமயில்ராஜா, காமராஜ், அனுசுயா கண்ணன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
The post ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்: தங்கப்பாண்டியன் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.