×

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம்

 

திருப்பூர், ஏப்.13: இ-பைலிங் முறையில் உள்ள நடைமுறை சிக்கல்களை சரி செய்ய கோரி திருப்பூர் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து நீதிமன்றங்களிலும் இ-பைலிங் நடைமுறை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதற்கான சர்வர் உரிய திறனுடன் இல்லாத நிலையில் நாள் கணக்கில் இது செயல்படாமல் உள்ளது. வழக்கறிஞர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.

இதற்கான உரிய எண்ணிக்கையிலான ஊழியர்கள் நியமிக்க வேண்டும். உரிய கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். இவற்றுக்கு தீர்வு காணும் வரை இந்த நடைமுறையயை கட்டாயப்படுத்தக்கூடாது என கூறி நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும், வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கையில் பங்கேற்காமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நீதிமன்ற புறக்கணிப்பில் திருப்பூர் பார் அசோசியேசன், அட்வகேட்ஸ் அசோசியேசன் மற்றும் மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் இதர வழக்கறிஞர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் இருந்தனர். இந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

The post வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...