×

டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி

லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியுடனான நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல் 18.1 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோவில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி கேப்டன் கே எல் ராகுல் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க ஆட்டக்காரராக குயின்டன் டிகாக், கே எல் ராகுல் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். டிகாக் (19 ரன்), தேவ்தத் படிக்கல் (3 ரன்) எடுத்து இருவரும் கலீல் அகமது பந்தில் வீழ்ந்தனர்.

எனினும் லக்னோ அணி முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது. ஆனால், அடுத்த வந்த ஸ்டோனிக்ஸ் 8 ரன் மற்றும் நிகோலஸ் பூரன் ரன் ஏதும் எடுக்காமல் குல்தீப் யாதவ் வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் சிறப்பாக ஆடிய கேப்டன் கே எல் ராகுல் 39 ரன்னுடனும், தீபக் ஹூடா 10 ரன், குர்னால் பாண்டியா 3 ரன்னுடன் நடையை கட்டினர். லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அயுஷ் பதானி 55 ரன்(35 பந்து,5 பவுண்டரி, 1 சிக்சர் ) மற்றும் அர்ஷத் கான் 20 ரன்(16 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ஸ்கோரை உயர்த்தினர்.

20 ஓவரில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல் அணி களமிறங்கியது. துவக்க வீரர் பிரித்வி ஷா 32 ரன்(22 பந்து, 6 பவுண்டரி எடுத்தார். வார்னர் 8 ரன்னில் அவுட் ஆனபோதும், கேப்டன் ரிஷப் பன்ட் 41 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ரவி பிஷ்னோய் பந்தில் ஸ்டம்பிங் ஆனார். ஜேக் பிரேசர் மெக்கர்க் அதிரடியாக ஆடி 55 ரன் (35 பந்து, 5 சிக்சர், 2 பவுண்டரி) எடுத்து அர்ஷத்கானிடன் பிடிபட்டார். இறுதியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

The post டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Delhi Capitals ,Lucknow ,IPL ,Lucknow Supergiants ,KL Rahul ,Dinakaran ,
× RELATED லக்னோ சவாலை சமாளிக்குமா டெல்லி