×

3ம் கட்ட தேர்தல் 94 தொகுதியில் மனு தாக்கல் துவக்கம்

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான 3ம் கட்ட வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி முடிவுகள் வௌியாகின்றன. தமிழ்நாடு, புதுவை உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 2ம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு மே 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி நிறைவுற்றது. இந்நிலையில் 12 மாநிலங்களின் 94 தொகுதிகளுக்கு மே 7ம் தேதி 3ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. குடியரசு தலைவர் சார்பில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வௌியிட்டதை தொடர்ந்து இதற்கான நடைமுறைகள் தொடங்கின. ஏப்ரல் 19ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். 20ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். 22ம் தேதி வரை மனுக்களை திரும்ப பெற்று கொள்ளலாம். இதைதொடர்ந்து மே 7ம் தேதி 3ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.

The post 3ம் கட்ட தேர்தல் 94 தொகுதியில் மனு தாக்கல் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்: வெளிநாடுகளை சேர்ந்த 18...