×

முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பாரமுல்லா தொகுதியில் போட்டி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா பாரமுல்லா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 5 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஜம்முகாஷ்மீரின் கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சி மற்றும் பிடிபி ஆகியவை இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. தேசிய மாநாட்டு கட்சி காங்கிரசுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

3 தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில்,தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் பருக் அப்துல்லா நேற்று வெளியிட்டார். இதில், பாரமுல்லாவில் உமர் அப்துல்லாவும், ஸ்ரீநகர் தொகுதியில் அகா சையது ரூஹூல்லா மெஹ்தி,அனந்தநாக் தொகுதியில் குஜ்ஜார் சமூக தலைவர் மியான் அல்தாப் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2009க்கு பிறகு முதல்முறையாக உமர் அப்துல்லா மக்களவை தேர்தலில் களம் காண்கிறார்.

The post முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பாரமுல்லா தொகுதியில் போட்டி appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Chief Minister ,Omar Abdullah ,Baramulla ,Srinagar ,Lok Sabha ,Union Territory ,National Conference Party ,PDP ,India ,Jammu ,Kashmir ,Dinakaran ,
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...