×

அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை

உதம்பூர்: காஷ்மீரில் உள்ள உதம்பூரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், இது இந்துக்களின் புனிதமான சாவன் மாதம், நவராத்திரி கொண்டாட்டம் வேறு நடக்கிறது. கடந்த ஆண்டு இந்த காலக்கட்டத்தில் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வந்த ஒருவர்(லாலு பிரசாத் யாதவ்) வீட்டுக்கு கூட்டணி கட்சித் தலைவர்(ராகுல்) போகிறார். அவர்கள் ஆட்டிறைச்சி சமைத்ததோடு, அதை வீடியோ எடுத்து இந்திய மக்களின் நம்பிக்கையை புண்படுத்தினர். இது அவர்களது முகலாய மனப்போக்கை காட்டுகிறது என்றார்.

மோடியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அசைவம் சாப்பிடுவதை முகலாய மனப்போக்கு என்று மோடி கூறியதற்கு சமூக வலைதள பயனாளர்கள் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 140 கோடி இந்தியர்களில் 80 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுபவர்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 20 சதவீதம் பேர்தான் சைவம் சாப்பிடுபவர்கள். இந்த நிலையில், 80 சதவீதம் இந்தியர்களை பிரதமர் மோடி அவமதித்துவிட்டதாக பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

The post அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Modi ,Udhampur ,Kashmir ,Chavan ,Hindus ,Navratri ,Lalu ,
× RELATED பேரவை தேர்தல் நடத்தப்படும் ஜம்மு...