- கோவா. ஐ. ஏ. கிளை
- நவோதய பள்ளிகள்
- ஐ.ஐ.எம்
- அண்ணாமலை
- சென்னை
- பாஜக
- அண்ணாமலை கோவை
- மக்களவை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கோயா
- ஐ. ஏ. கிளை
- 4 நவோதய பள்ளிகள்
சென்னை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதிக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மக்களவைத் தேர்தல் வருகின்ற 19ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளையும் அள்ளி வீசி வருகின்றன. அந்த வகையில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் பின்வருமாறு..
*கோவையில் 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். கோவையில் சர்வதேச விமான முனையம் அமைக்கப்படும். கோவையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் அமைக்கப்படும்.
*கோவையில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்கப்படும். ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவோம். கோவை மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*கோவையில் 4 நவோதயா பள்ளிகள் திறக்கப்படும். நாடு முழுவதிலும் உள்ள ஆன்மிக தலங்களுக்கு கோவையில் இருந்து 10 ரயில்கள் இயக்கப்படும்.
*காமராஜர் பெயரில் நடமாடும் உணவகங்கள் அமைக்கப்படும். கோவை தொகுதியில் ஐஐஎம் அமைக்கப்படும்.
*சர்வதேச தரமுள்ள நகரமாக 5 ஆண்டுகளில் கோவை மாற்றத்தை சந்திக்கும்.ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, பணிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.
*கோவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர் மையங்கள் அமைக்கப்படும்.
*கோவை தொகுதியில் 250 மக்கள் மருந்தகம் நிறுவப்படும். கோவையில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
*கோவை எப்போதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
*சரவணம்பட்டியில், மக்களின் பொழுதுபோக்குக்காக பொதுப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
The post கோவையில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம், 4 நவோதயா பள்ளிகள், ஐஐஎம் அமைக்கப்படும்: வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!! appeared first on Dinakaran.