×

திருப்பூரில் ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தாக்கிய பா.ஜ.க. பிரமுகர் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!!

திருப்பூர்: திருப்பூரில் ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தாக்கிய பா.ஜ.க. பிரமுகர் சின்னசாமி மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. திருப்பூரில் பிரச்சாரத்துக்கு சென்ற பா.ஜ.க.வினரிடம் ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய சங்கீதா என்ற பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் ரெடிமேட் கடை நடத்தும் சங்கீதா என்ற பெண் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தினர்.

திருப்பூர் ஆத்துப்பாளையத்துக்கு பிரச்சாரத்துக்கு வந்த பா.ஜ.க.வினரிடம் சங்கீதா ஜி.எஸ்.டி. வரி குறித்து கேள்வி எழுப்பினார். பிரச்சார வாகனத்தை மறித்து ஜி.எஸ்.டி. வரி குறித்து கேள்வி எழுப்புவதா என்று கூறி பா.ஜ.க.வினர் தகராறு செய்தனர். கேள்வி எழுப்பிய பெண்ணை தரக்குறைவாக பா.ஜ.க.வினர் திட்டியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண்ணை பா.ஜ.க.வினர் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே, பா.ஜ.க.வினர் தன்னை தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு சங்கீதா புகார் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பியதால் தாக்கப்பட்டதாகவும், பிரச்சாரத்துக்கு வந்த பா.ஜ.க.வினரிடம் ஏராளமான பெண்கள் கேள்வி எழுப்பிய நிலையில் தன்னை மட்டும் தாக்கியதாக சங்கீதா போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், பெண்ணை தாக்கிய பா.ஜ.க. பிரமுகர் சின்னசாமி மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தாக்கி பா.ஜ.க.வினர் வன்முறையில் ஈடுபட்டதால் திருப்பூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post திருப்பூரில் ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தாக்கிய பா.ஜ.க. பிரமுகர் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Tirupur ,Chinnaswamy ,Sangeeta ,
× RELATED சாயக்கழிவுநீரை திறந்து விடும் சாய...