- காங்கிரஸ்
- தமிழ்நாடு காங்கிரஸ்
- ஜனாதிபதி
- செல்வாப்பேருந்தாள்
- நெல்லை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- செல்வப்பெருந்தகாய்
- இந்தியா
- தின மலர்
நெல்லை: எங்கள் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் ரூ.1 கூட பணம் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். நெல்லையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கான இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தேர்தல். சர்வாதிகாரிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். ஜனநாயகவாதிகளான நாங்கள் எந்த தவறையும் செய்ய மாட்டோம். 100 நாள் வேலை திட்டத்தை பற்றி பேச மோடி அரசுக்கு எந்த தகுதியும் இல்லை என தெரிவித்தார். எங்கள் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் ரூ.1 கூட பணம் இல்லை.
மக்கள், காங்கிரஸ் தொண்டர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து தான் பரப்புரை செய்கிறோம். பிரச்சாரம் செய்ய சொந்த வாகனம் கூட இல்லை. எங்கள் வேட்பாளர் மக்கள் அனைவருக்கும் பிரார்த்தனை செய்பவர். ஒரு அபூர்வமான வாக்காளரை களத்தில் இறக்கியுள்ளோம். எங்கள் ஆட்சியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என கூறினார்.நெல்லையில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தியின் தமிழக வருகை தொடர்பாக செல்வப்பெருந்தகை பேசுகையில், நெல்லையில் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க ராகுல்காந்தி இன்று வருகை தருகிறார். ராகுல்காந்தி வருகை தேர்தல் திருவிழாவாக பார்க்கிறோம்; அவரது வருகை எழுச்சியை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
The post எங்கள் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் ரூ.1 கூட பணம் இல்லை: தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.