×

கோவை ஆவாரம்பாளையத்தில் 10 மணியை கடந்து தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!!

கோவை: கோவையில் தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்பத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்த சூழ்நிலையில் தேர்தல் நடத்தை விதியை மீறி பிரச்சாரம் மேற்கொண்ட சம்பவம் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியது.

இது தொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமீறிய குற்றத்திற்காக அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளர் 10 மணிக்குள்ளாக பிரச்சாரத்தை முடித்து கொள்ள வேண்டும். ஆனால் 10 மணிக்கு மேல் 10.39 மணி அளவில் ஆவாரம் பாளையம் பகுதியில் அண்ணாமலை பிரச்சாரம் நடைபெற்று வந்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே இத்தகைய சம்பவத்தில் விதியை மீறி பிரச்சாரம் செய்வதாக தெரிவித்து திமுகவை சார்ந்தவர்கள், இந்தியா கூட்டணி சார்ந்தவர்கள் போலீசார் முறையிட்டபோது பாஜகவினர் அவர்களை தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வன்முறை போன்ற பல்வேறு சம்பவங்கள் கண்டிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக தரப்பட்ட புகாரின் அடிப்படையில் ஏற்கனவே 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் பாஜக தலைவர் மீது தேர்தல் நடத்தை விதிமுறையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post கோவை ஆவாரம்பாளையத்தில் 10 மணியை கடந்து தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Coimbatore ,BJP ,president ,Coimbatore parliamentary ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...