×

கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக அரசால் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரச்சாரம்

கிருஷ்ணகிரி: கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக அரசால் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ஓசூர் நகரத்தில் வெயில் கொளுத்துகின்ற நேரத்தில் அதனை தாங்கிக்கொண்டும், வேலை நாட்களிலும் எங்களின் உரையை கேட்க இவ்வளவு பேர் வந்திருப்பதால் மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்னும் 2 நாட்களில் புதிய வருடம் பிறக்கிறது. மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று உங்கள் முன்பு பேச வாய்ப்பு கிடைத்ததற்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். வருகின்ற மக்களவை தேர்தலில் பாஜகவை வெற்றிபெற செய்ய வேண்டும்.தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக அரசால் தொழில் வளர்ச்சி பெருகி உள்ளது. தமிழ்நாட்டில் ராணுவ தளவாடம் கொண்டு வந்ததால் பல நன்மைகள் கிடைத்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது 2.75 லட்சம் குடும்பத்திற்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் 2.5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என குறிப்பிட்டார்.

The post கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக அரசால் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரச்சாரம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,BJP government ,Union minister ,Nirmala Sitharaman ,BJP ,Narasimhan ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு 2 பெண்கள் கைது