×

கோடை வெயிலின் தாக்கம்: கருகும் தேயிலை செடிகள்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் சுற்று வட்டார பகுதியில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலை, காபி, இஞ்சி, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்கள் கருகி காணப்படுகிறது. இதனால் அதனை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்தால் தேயிலை உள்ளிட்ட விவசாயங்கள் பாதிக்கும் நிலை உள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெய்யும் கோடை மழை பொய்த்து போனதால் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொன்னானி உள்ளிட்ட பல இடங்களில் தேயிலைச் செடிகள் கருகி காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் கோடை மழை பெய்யுமா? என எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

The post கோடை வெயிலின் தாக்கம்: கருகும் தேயிலை செடிகள் appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Nilgiri district ,Pandalur, Kudalur ,Dinakaran ,
× RELATED பந்தலூர் பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைத்தும் பயனில்லை