×

பிரதமர் மோடி குன்னக்குடிக்கே அன்னக்காவடி எடுத்தாலும் தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கமுடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சனம்

வேலூர்: இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் சாயநாத புரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் நாட்டில் ஆட்சி முறையை மாற்ற மோடி முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை வந்தாலும், குன்னக்குடிக்கே அன்னக்காவடி எடுத்தாலும் பாஜக-வால் வெற்றி பெறமுடியாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சித்தார்.

இதேபோல் செஞ்சி அருகே நெகனூர், ஈச்சூர், அம்மாகுளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆதரவு திரட்டினார். அப்போது பிரதமர் மோடி ஒட்டுமொத்த விவசாயிகளின் விரோதியாக செயல்படுவதாக விமர்சித்தார். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு உள்ளிட்ட எந்தவித வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டினார். பெரும் மழை, வெள்ளத்தால் தமிழ்நாடு தத்தளித்த போது வராத பிரதமர் மோடி வாக்குகாக தற்போது அடிக்கடி தமிழ்நாடு வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் விமர்சித்தார்.

 

The post பிரதமர் மோடி குன்னக்குடிக்கே அன்னக்காவடி எடுத்தாலும் தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கமுடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,Modi ,Annakkavadi ,Minister ,Rajakannappan ,Vellore ,India Alliance ,Rajakanappan ,Sayanatha ,Puram ,DMK ,Kathir Anand ,Kunnakkudi ,
× RELATED அண்ணாமலை வெளிநாடு செல்ல மோடி அனுமதி...