×

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கோடை மழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தென்காசி: தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கோடை மழை பெய்ததால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் ஆகிய இரண்டு மாதங்களும் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் மக்களை வாட்டி வதைத்தது.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவிலும் அதிகாலை 3 மணி அளவிலும் திடீரென கோடை மழை பெய்தது. இத்தகைய கோடை மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது காணப்பட்டு வருகிறது. குற்றாலம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் எதிர்பாராமல் வந்த நீரை கண்டு ஆனந்தமாக நீராடி மகிழ்ந்து வருகின்றனர்.

 

The post தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கோடை மழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Kurthala ,Koorala ,Kurdala ,Dinakaran ,
× RELATED குற்றால அருவிகளில் சென்சார் அமைக்க நிபுணர்கள் ஆய்வு