- தமிழ்
- தமிழ்நாடு
- நீலகிரி மாவட்டம், குன்னூர்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நீல்கிரி மாவட்டம்,
- குன்னர்
- வானிலை ஆய்வு மையம்
- நீலகிரி குன்னூர்
- Kunnur
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் மிக பலத்த மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி குன்னூரில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. குன்னூருக்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டம் சேர்வலாறு அணை பகுதியில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவானது. நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் பில்லிமலை எஸ்டேட்டில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நெல்லை, குமரி மாவட்டங்களில் மழை:
* நெல்லை மாவட்டம் பணகுடி, வள்ளியூர், ராதாபுரம், வடக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வள்ளியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை காரணமாக வெயில் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.
* மதுரை சோழவந்தான் பகுதியில் திடீரென்று மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
* கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் மிக பலத்த மழை பதிவு; மக்கள் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.