×

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் 87 பேர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடிதம்!

டெல்லி: மின்னணு வாக்கு இயந்திரங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்களை போக்க ஆணையம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியினர் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க ஆணையம் தவறிவிட்டதாகவும் கருத்து. ஒன்றிய அரசு பழிவாங்கும் போக்கில் ஈடுபடுவதாக முன்னாள் அதிகாரிகள் கண்டனம். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் 87 பேர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடிதம். எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபடுவதை கண்டு ஆணையம் மவுனமாக இருக்கக்கூடாது. அரசியல் சட்ட 324-வது பிரிவின்படி வருமான வரித்துறை, ED, சிபிஐ அமைப்புகளை ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வலிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் 87 பேர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடிதம்! appeared first on Dinakaran.

Tags : US ,IPS ,Chief Election Commissioner ,Delhi ,EU government ,Dinakaran ,
× RELATED 64 கோடி மக்களை வாக்களிக்க செய்து உலக...