×

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களில் 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்: பிரதீப்ஜான் தகவல்


சென்னை: அடுத்த 4 நாட்களில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் தகவல் தெரிவித்துள்ளார். தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 4 நாட்களில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும். தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகரில் அடுத்த 4 நாட்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. தேனி, கொடைக்கானல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டையில் அடுத்த 4 நாட்களில் நல்ல மழை பெய்யும்.

ஏப்ரல் 15-ம் தேதிக்குப் பிறகு டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வெப்பநிலை குறைந்து வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் ஏப்ரல் மாதத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களில் 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்: பிரதீப்ஜான் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Pradeep Jan ,Chennai ,South India ,
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...