×

இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதராக கேமரூன் நியமனம்

புதுடெல்லி: இந்தியாவுக்கான புதிய இங்கிலாந்து தூதராக லிண்டி கேமரூனை இங்கிலாந்து நியமித்துள்ளது. இதுகுறித்து வௌியிடப்பட்ட அறிக்கையில், “இங்கிலாந்து தூதராக தற்போதுள்ள அலெக்ஸ் எல்லிஸ் மற்றொரு அரசு பதவிக்கு மாற்றப்பட உள்ளார். இதைதொடர்ந்து லிண்டி கேமரூன் இந்தியாவுக்கான தூதராக இந்த மாதம் பதவி ஏற்பார்.

இங்கிலாந்து வடக்கு அயர்லாந்து அலுவலகத்தின் தலைமை இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த லிண்டி கேமரூன், தற்போது இங்கிலாந்து தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதராக கேமரூன் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Cameron ,UK ,India ,NEW DELHI ,LINDY CAMERON ,Alex Ellis ,Dinakaran ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...