×
Saravana Stores

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று 65,570 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 24,446 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.53 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 13 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupathi Eumamalayan Temple ,Thirumalai ,Tirupathi Elumalayan Temple ,Swami ,Temple Undiyal ,Tirupathi Eumalayan Temple ,
× RELATED 18 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம்:...