×

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.92.95 லட்சம் ஒரு கிலோ தங்கம் காணிக்கை

சமயபுரம்: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் எண்ணப்பட்டதில் 92 லட்சத்து 93 ஆயிரத்து 585 ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் கணக்கிடப்பட்டன. சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் பூச்சொரிதல் விழாவை தொடர்ந்து சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்ககைளை செலுத்துவது வழக்கம்.

கோயில் உண்டியல் மாதத்துக்கு 2 முறை திறந்து எண்ணப்படும். அதன்படி நேற்று அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று நடந்தது. சமயபுரம் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் கல்யாணி, அறங்காவலர் குழு உறுப்பினர் பிச்சைமணி, சுகந்தி, லட்சுமணன் முன்னிலையில் கோயில் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் காணிக்கை பணத்தை எண்ணினர். இதில் பக்தர்களின் காணிக்கை ரூ.92 லட்சத்து 95 ஆயிரத்து 585 ரொக்கம், 1 கிலோ 296 கிராம் தங்க நகை, 2 கிலோ 579 கிராம் வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் 114 இருந்தது. இவை அனைத்தும் கோயில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டன.

The post சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.92.95 லட்சம் ஒரு கிலோ தங்கம் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,Mariamman ,temple ,Mariamman temple ,Trichy ,Samayapuram Mariamman temple ,
× RELATED சமயபுரம் மாரியம்மன் கோயிலில்...