×

ஆட்சி நடத்துவது குறித்து தமிழகத்தில் பிரதமர் மோடி பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்: செல்வபெருந்தகை அட்வைஸ்

திருவாரூர்: நாகை எம்பி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: வெளிநாடுகளில் இருந்து வரும் கருப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் கொடுப்பேன் என தெரிவித்த பிரதமர் மோடி இப்போது ஒவ்வொரு இந்தியர் தலையிலும் ஒன்றரை லட்சம் ரூபாய் கடனை சுமத்தி விட்டார். மோடியின் வாக்குறுதியை நம்பி வங்கிகளில் கணக்கு துவங்கிய பொதுமக்களிடமிருந்து மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் ரூ. 21 ஆயிரம் கோடி சுருட்டப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. மக்களை பற்றி கவலைப்படாத மோடி அதானி, அம்பானி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்.

விவசாயிகள், மாணவர்களின் கல்விக்கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கும் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். 40 சதவீதமாக இருந்த கார்ப்பரேட்டுகளுக்கான வரியை 22 சதவீதமாக குறைத்ததால் ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில் 2 ஆண்டுகளுக்குள் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு ஆட்சி எப்படி நடைபெற வேண்டும். ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post ஆட்சி நடத்துவது குறித்து தமிழகத்தில் பிரதமர் மோடி பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்: செல்வபெருந்தகை அட்வைஸ் appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Selvaperunthakai ,Tiruvarur ,Congress ,President ,Tiruvarur South Road ,Communist Party of India ,Y. Selvaraj ,Nagai MP ,
× RELATED வெறுப்பு பேச்சுகளை பிரதமர் மோடி...