×

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி

மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமான முனையத்தின் டெர்மினல் 1 பகுதியில் இருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களில் செல்லும் பயணிகள், தங்களின் உடைமைகளை தானியங்கி இயந்திரங்களில் ஸ்கேன் மூலம் பரிசோதித்து, அவற்றை கன்வேயர் பெல்ட் மூலம் விமானத்தில் ஏற்றுவதற்கு அனுப்பி வைக்கலாம். இதற்காக டெர்மினல் 1ல் பாதுகாப்பு சோதனை கவுன்டர்கள் 60லிருந்து 63 வரை தானியங்கி வசதி அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் ஊழியர்களுக்கு பதில் தானியங்கி இயந்திரங்கள் மட்டுமே இருக்கும். அந்த இயந்திரத்தில் தங்களின் உடைமைகளை பயணிகள் வைத்துவிட்டு, தங்களின் பயண டிக்கெட், பிஎன்ஆர் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன்மூலம் அவர்களுக்கு உடனடியாக போர்டிங் பாஸ் வரும். . இந்த புதிய தானியங்கி செயல்பாட்டின் மூலம் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்புதிய திட்டம் படிப்படியாக டெர்மினல் 4ல் அனைத்து விமான பயணிகளுக்கும் செயல்பாட்டுக்கு வரும்.

The post சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,IndiGo Airlines ,Terminal 1 ,Chennai Domestic Airport ,
× RELATED மீனம்பாக்கம் விமான நிலையத்தில்...