×

ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதியில் சாம்பல் நிற அணில்கள் கணக்கெடுப்பு துவக்கம்

ஸ்ரீ வில்லிபுத்தூர்: ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதியில் சாம்பல் நிற அணில்கள் கணக்கெடுக்கும் பணி நேற்று காலை துவங்கியது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அரிய வகை சாம்பல் நிற அணில்கள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து சாம்பல் நிற அணில்கள் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களிலும் அதிகமாக வசித்து வருகின்றன. சாம்பல் நிற அணில்களை ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.

இதன்படி, முதற்கட்டமாக தனியார் நிலங்களில் வசிக்கும் சாம்பல் நிற அணில்கள் கணக்கெடுப்பு பணி நேற்று காலை துவங்கியது. குறிப்பாக விரியன்கோவில் பகுதியை ஒட்டியுள்ள அத்தி துண்டு மற்றும் அழகர்கோவில் மருதடி பீட் 1, கான்சாபுரம் பீட் 1, கான்சாபுரம் பீட் 2 மற்றும் பிளவக்கல் அணையை ஒட்டியுள்ள தனியார் விவசாய நிலங்களில் கணக்கெடுப்பு பணி நடந்தது. கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினரோடு ஊட்டி வனவியல் கல்லூரியை சேர்ந்த 20 மாணவ, மாணவிகளும் பங்கேற்றுள்ளனர். கணக்கெடுப்பு பணி இன்றும் நடக்கிறது. வனப்பகுதியில் வசிக்கும் சாம்பல் நிற அணில்கள் பற்றிய கணக்கெடுப்பு வரும் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும். மே 2ம் தேதி வரையாடுகள் கணக்கெடுப்பு நடைபெறும் என துணை இயக்குநர் தேவராஜ் தெரிவித்தார்.

 

 

The post ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதியில் சாம்பல் நிற அணில்கள் கணக்கெடுப்பு துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Sri Villiputhur ,Sri Williputhur ,Western Ghats of ,Chenbagathop ,Sri Williputhur, Virudhunagar district ,Dinakaran ,
× RELATED வெள்ளிங்கிரி மலை ஏறிய பூசாரி மூச்சு திணறி சாவு: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு